Friday, January 10, 2014

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு குளிர்பானம் கொடுத்து மயக்கி கொள்ளை அவதானமாக இருக்க பொலிஸ் அறிவுறுத்தல்!


வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்புபவர்களுக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானங்களை வழங்கி அவர்களிடமுள்ள சொத்துக்களை கொள்ளையிடும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளதுடன் இவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் மேற்கு பிராந்திய வட பகுதி குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அண்டிய பகுதிகளிலும் கொழும்பு மத்திய பஸ்தரிப்பிடத்திலும் வைத்து நட்பாக பேசி உதவுவதாக ஏமாற்றியே இந்த கும்பல் பணம் சொத்து என்பவற்றை கொள்ளையிட்டு வருவதாகசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 0112947777, 0112947780, 0778272677, 0775581927 ஆகிய இலக்கங்களுக்கு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com