சட்டவிரோதமாக மலேஷியாவில் தங்கியுள்ளவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்காக நடவடிக்கை ஆரம்பம்!
சட்டவிரோதமாக மலேஷியாவில் தங்கியுள்ளவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்காக நடவடிக்கை ஆரம்பித் துள்ளதாக மலேஷியாவுக்கான இலங்கை உர்ஸ்தானி கராலயம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இவர்களை அனுப்பிவைப்பது தொடர்பில் மலேஷியாவின் குடி வரவு குடியகல்வு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வரு வதாக இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்ஸார் தெரி வித்துள்ளார்.
சட்டவிரோதமாக மலேஷியாவில் தங்கியுள்ள 40 தொடக்கம் 50 வரையான இலங்கையர்கள் தினம்தோறும் உயர்ஸ்தானிகராலயத்தில் தஞ்சமடைவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, சுமார் 5,000 இலங்கையர்கள் தற்போது மலேஷி யாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றமை தெரிவந்துள்ளது.
0 comments :
Post a Comment