எல்.ரி.ரி.ஈ இயக்கத்திற்கு உதவிய நாடுகளின் முகத்திரையை கிழித்துக்காட்ட நடவடிக்கை!
எல்.ரி.ரி.ஈ இயக்கத்திற்கு உதவிய நாடுகளின் முகத்தி ரையை கிழித்துக்காட்ட வெளிச்சம் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்னிப் யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ இயக்கம் பயன்படுத்திய பல்வேறுபட்ட மேற் குலக நாடுகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகள், நோர்வேயின் செய்மதித் தொடர்பாடல் சாதனங்கள் போன்றனவற்றை எல்.ரி.ரி.ஈ இயக்கம் பயன்படுத்தியுள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் 30 ஆண்டுகள் பிரபாகரன் செய்த போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பத் தவறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment