இலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்க தயாராகிறது புதிய சட்டம்: அமைச்சர்
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள் என்பதுடன் தற்போது இந்தப்புதிய சட்ட வரைபு புதிய சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதே வேளை ‘பாரம்பரிய மருத்துவ உலகில் கஞ்சாவுக்கு ‘மூவுலகையும் வென்ற மூலிகை’ என்ற பெயர் இருக்கிறது எனவே தேசிய பாரம்பரிய மருத்துவ முறைக்கு உகந்த விதத்தில் கஞ்சா செய்கை அமைக்கப்பட வேண்டும் என்கின்ற விதிமுறைகளை எங்கள் புதிய சட்டத்தில் உள்ளடக்குகிறோம்’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்த புதிய சட்டத்தை வெறும் கஞ்சா வளர்ப்பு அனுமதிக்கான சட்டமாக மட்டும் வராமல் முழுமையான ஆயுர்வேத மருத்துவச் சட்டமாக புதிய சட்டம் உருவாகும் என்றும் சாலிந்த திசாநாயக்க கூறினார்.
0 comments :
Post a Comment