போதைப்பொருள் பாவனைக்காக ஒன்றரை இலட்சம் பேர் கைது!
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 966 பேர் கடந்த மூன்று வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 133 கிலோ நிறையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் தெரிவித் தனர்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் சகல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போதே இவ்வாறு பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று வருடங்களில் 358 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் 51,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதே போல 176,718 கிலோ நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அச்சம்ப வத்துடன் தொடர்புடைய 97,601 பேர் கைது செய்யப்பட்டுள்ளார் கள்.
மேலும் கொக்கெயின், ஹேஸ் உள்ளிட்ட வெவ்வேறு வகையான போதைப் பொருட்கள் தொடர்பாக 31 பேர் என ஒன்றரை இலட்சத்து 48 ஆயிரத்து 966 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment