மர்வினுக்கு எதிராக தான் பாதுகாப்பளிப்பதாக கூறுகிறார் பசில் ராஜபக்ஷ!
களனித் தொகுதியின் ஸ்ரீசுகவின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் மர்வின் சில்வாவுக்கு எதிராக களனி பிரேதேச சபை உறுப்பினர்கள் 12 பேருக்கும் பாதுகாப்பைத் தான் வழங்குவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
மர்வின் சில்வாவுக்கு எதிராகவுள்ள 12 பேரையும் கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து உரையாடும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
களனித் தொகுதியின் பிரச்சினைபற்றி எந்தவொரு ஊடகத்திற்கும் அறிக்கைகள் விடுவதிலிருந்தும், தகவல்கள் வழங்குவதிலிருந்தும் தவிர்ந்துகொள்ளுமாறு தன் அழைப்பை ஏற்று வந்த பன்னிருவரையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வேண்டியுள்ளார் எனவும் மேலும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment