சயுராவை சாய்த்தவர்களுக்கு இரண்டாண்டு கடூழிய சிறை விதித்தது கொழும்பு மேல் நீதி மன்றம்!
இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான சயுர என்ற கப்பல் மீது 2007 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் மூலம் கப்பலுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் கடற்படையினரை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுக்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வளக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு சந்தேக நபர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களான இந்திரதாஸ் வசீகரன், மரியதாஸ் என்ஜலோ, பீட்டர் பியோமேசன், ஜெயசிங்கம் ஜெயமோகன், சிரில் ஜூன் கிரிசாந்த மற்றும் குமார் அந்தனி ஆகிய ஆறு பேரும் குற்றத்தை ஒப்பு கொண்டதனால் மேல் நீதிமன்ற நீதவான் லலிதா ஜயசூரிய ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாண்டு காலம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீப்பளித்தார்.
0 comments :
Post a Comment