பிரபாகரனின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மீட்டதற்கே ஜெனீவாவில் நாட்டுக்கு எதிராக குண்டுகள் வெடிக்கின்றது!
பிரபாகரனையும் எல்.ரி.ரி.ஈ பங்கரவாதத்தையும் ஒழித்து தமிழ் மக்களை மீட்டதன் காரணமாகவே இன்று ஜெனீவா வில் நாட்டுக்கு எதிராகவும ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எதிராகவும் ஜெனீவாவில் மனித உரிமை என்ற பெயரில் குண்டுகள் வெடிக்கின்றன என பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்தார்.
முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தில் பிரபாகரனின் அடக்குமுறையில் தமிழ் மக்கள் சிக்கியிருந்தனர். வடக்கில் பிள்ளைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. வாழும் உரிமை வாழ்வாதார உரிமை பறிக்கப்பட்டு மக் களிடம் கப்பம் அறவிடப்பட்டது. விவசாயம், வர்த்தகம் செய்வதற்கு மக்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை.
ஆனால், அடக்குமுறையிலிருந்த வடக்கு மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த உண்மையை புரிந்து கொண்டும் அரசியலுக்காக ஜே.வி.பி. தேசத்துரோகமான கருத்துக்களை கூறுகின்றது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் பி மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களுக்கு சென்றால் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை காணமுடியும். இடிக்கப்பட்ட கோவில்கள் மீளக்கட்டப்பட்டு, பாடசாலைகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மக்களுக்கு வாழ்வாதாரங்களும் வழ ங்கப்பட்டுள்ளன.
இது மட்டுமா? இன்று தெற்கின் சிங்கள மக்களின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகும். ஆனால் வடக்கில் தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி 20 வீதமாகும்.
நாட்டில் இன்று இனங்களிடையே தேசிய நல்லிணக்கம் நிலவுகின்றது. பிரபாகர னையும் பயங்கரவாதத்தையும் பாதுகாத்து யுத்ததை தொடரச் செய்யவும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தவும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் முயற்சித்தன அழுத்தங்கள் கொடுத்தன. இதற்கு அடிபணியாத ஜனாதிபதி யுத்தத்தை முடித்து மக்களை மீட்டார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாததன் காரணமாகவே ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் எதிராக மனித உரிமை மீரல் என்ற குண்டுகள் வெடிக்கின்றன.
நாட்டில் குண்டு வெடிப்புக்களை நிறுத்தியதன் காரணமாகவே ஜெனீவாவில் குண்டுகள் வெடிக்கின்றன. ஐ.நா. பேரவையை இலக்காகக் கொண்டு தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் எமது அரசியல் ஸ்திரத்தன்மையை உலகுக்கு வெளிப்படுத்த முடியும். ஆனால், இத்தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலுக்கும் ஐ.நா.வுக்கும் முடிச்சுப்போடும் தேசத்துரோகத்தை ஜே.வி.பி. மேற்கொள்கின்றது.
ஆனால் ஜனாதிபதி தமிழ் மக்களின் மீட்பரே தவிர ஆக்கிரமிப்பாளர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்
0 comments :
Post a Comment