கொழும்பு மாவட்டச் செயலக புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
கொழும்பு நாரஹேன்பிட்டிய, எல்விட்டிகல மாவத்தையில் 1600 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிகளைக் கொண்ட கொழும்பு மாவட்ட செயலக புதிய கட்டடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (17.01.2013) காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான டப்.டி.ஜே.செனவிரத்ன, தினேஷ் குணவர்த்தன, சுசில் பிரேம ஜயந்த, ஏ .எச்.எம்.பவுசி, பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன ,மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ,பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி அபேகோன் ,கொழும்பு மாவட்ட செயலாளர் எச்.டீ.கமல் பத்மசிறி, கொழும்பு மாவட்டச் செயலக மேலதிகச் செயலாளர் தில்ருக்ஷி வல்பொல,பிரதேச செயலாளர்கள் உட்பட் உயரதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment