கொலைச் சந்தேக நபருக்கு வடமாகாண சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி!
ஈபிடிபியின் நெடுந்தீவுப் பிரதேச சபைத்தலைவர் றெக்ஷியனின் கொலையின் சந்தேக நபரான அக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விற்கு மிகவும் விசுவாசியான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு கடந்த இரு மாதங்களாக விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளார். வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரான இவருக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட றெக்ஷ்சியனின் மனைவியுடன் டக்ளசின் சகா கமலேந்திரனுக்கு ஏற்பட்டிருந்த தகாத உறவுகாரணமாகவே இடம்பெற்றதென பொலிஸார் தெரிவிக்கும் அதேநேரம் கொலையுண்டவரின் மனைவியும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கொலை மேற்படி இருவராலும் மேற்கொள்ளப்பட்டது என்பதை சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் கொலைக்குற்ற சந்தேக நபர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதற்கு அரசியல் பிரபலங்களான சட்டத்தரணி ரெமிடியஸ், (தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று அரசுடன் இணைந்து கொண்டுள்ளார்) மற்றும் ரெலோ முதல்வர் சிறிகாந்தா ஆகியோர் ஆஜராகி வருகின்றனர்.
பணத்திற்காக யாழ் சட்டத்தரணிகள் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு தயங்க மாட்டார்கள் என்பதற்கு வரலாறு பல சம்பவங்களை சான்றாக வைத்துள்ளது.
வழக்குகளில் குழந்தைகளின் சாட்சிகள் பெரும்பாலும் குறுக்கு விசாரணையின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு கொலை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த குழந்தை ஒன்று வேம்பு மரத்தின் கீழ் கொலை நடந்ததை விபரித்தது. சில நாட்களில் குறித்த வேம்பு மரத்தை அடியோடு அழித்த சட்டத்தரணி ஒருவர் குழந்தை சொல்வது தவறான சாட்சியம் என தனது கட்சிக்காரனான கொலை காரணை விடுவித்து கொண்டார்.
அன்றிலிருந்து ஜீ.ஜீ பொன்னம்பலம் கொலைஞர்களின் தந்தையாக யாழில் வலம்வந்தார் என்பது யாவரும் அறிந்தது.
0 comments :
Post a Comment