விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியது தலைவருக்காக அல்ல... பயணிகளுக்கு உதவுவதற்கே!
ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க தனது சொந்த்த் தேவைக்காக சிங்கப்பூருக்குச் சென்று, அங்கிருந்து இலங்கைக்கு வருவதற்காக நவாபம்பூரிலிருந்து கொழும்பு வருவதற்காக இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானமொன்றை சிங்கப்பூருக்கு வரவழைத்ததாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் தெளிவுறுத்துவதற்காக ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு தரையிறக்கப்பட்டதற்கான காரணம் ஸ்ரீலங்கன் விமானமொன்று காலதாமதமாவதல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு உதவி வழங்கும் நோக்கிலாகும் எனவும், விமானத்தின் விமான ஓடுபாதையை மாற்றுவதற்காக ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க எந்தவொரு அறிவித்தலும் விடவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-
விமான நிறுவனம் சிங்கப்பூருக்கு கொழும்பிலிருந்து இரு பயண நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 2014 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு பயணிக்கவிருந்த UL 306 விமானம் தொழிநுட்ப விடயங்கள் காரணமாக தாமதமாகியுள்ளதுடன், இதனால் கொழும்பிலிருந்து 0100 மணிக்கு பயணிக்கவிருந்த விமானம் 0447 மணித்தியாலங்கள் தாமதமாகின. அத்தாமதமானது 3 மணித்தியாலங்கள் 47 நிமிடங்களாகும். இதற்கேற்ப சிங்கப்பூரிலிருந்த மீண்டும் வருகின்ற விமானமானது 1000 மணிக்கு வரவிருந்தாலும், அதனை மீண்டும் 1200 மணிவரை மாற்றியமைப்பதற்கு வேண்டியேற்பட்டது.
இதனால் மேற்சொன்ன திகதியில் சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த விமானம் தாமதமானதுடன், ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் கோலாலம்பூர் விமானத்தை அதற்காக பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
UL 307 விமானத்தின் தாமதம் காரணமாக அதில் பயணிக்கவிருந்த விமானப் பயணிகளுக்கு கோலாலம்பூர் விமானம் சிங்கப்பூருக்கான பயணப் பாதையை மாற்றுவதன் ஊடாக சாதக நிலை ஏற்பட்டது.
மேற்சொல்லப்பட் ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனத்தின் ஒரு பயணமானது கோலாம்பூர் மற்றும் சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கான செயற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் மிகவும் அவதானமாக தெளிவுபடுத்துவது யாதெனில், எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் விமான ஓடுபாதை மாற்றியமைக்கப்படவில்லை என்பதாகும்.
(கேஎப்) .
0 comments :
Post a Comment