யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரேவிதமான மருத்துவ வசதிகள் கிடைக்கும்படி செய்வதுதான் மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நாட்டு அரசினதும் சிறந்த கடமையாக இருக்க முடியும் அந்த வகையில் யாழ்.தெல்லிப்பளையில் அமைக்கப்பட்டிருக்கும் புற்றுநோய் வைத்தியசாலையினை இன்று(19.01.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இதுவரை காலமும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர்களெல்லாம் மஹரகமவுக்கே செல்ல வேண்டிய தேவை இருந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்திய சாலை ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது யாழ்.மக்கள் மட்டுமல்லாது வடபகுதி மக்களுக்கும் சிறந்த ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இன்றைய வைத்தியசாலை திறப்புவிழாவில் சமயத்தலைவர்கள், அரசதரப்பு அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண ஆளுனர், முதலமைச்சர் மற்றும் அரச தரப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபையின் உறுப்பினர்கள் வைத்தியர்கள் மற்றும் நோயாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment