Tuesday, January 21, 2014

தொழில்சார் வல்லுனர்களை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் உப சேவையில் இணைக்க திட்டம்!

மருத்துவம், சட்டம், பொறியியல், தாதியர், நிர்மாணத்துறை போன்ற எந்தவொரு தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழில் சார் வல்லுனர்களை இலங்கை இராணுவ தொண்டர் படை யணியின் உப சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட் டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதன்படி வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டே அதாவது தாம் பணியாற்றும் துறையில் சம்பளத்தை பெற்றுக் கொண்டே தொழில்சார் வல்லுனர்கள் தொண்டர் படையணியின் உப சேவையின் ஊடாக நாட்டிற்கும், தேசிய அபிவிருத்திக்கும் சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்படவுளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொண்டர் படையணியின் உப சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அல்லாத இராணுவ தரம் மற்றும் நடைமுறை தொடர்பிலான பயிற்சி வழங்கப்பட்டு கல்வி அறிவு, ஆளுமை, திறமை என்பவற்றுக்கு அமைய பதவிகளும், தரங்களும் வழங்கப்படவுள்ளது.

உப சேவையின் ஊடாக தாம் வகிக்கும் பதவி மற்றும் தரத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், இராணுவ உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகன, மருத்துவ மற்றும் காப்புறுதி போன்ற வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் என்றார். உலகின் பல முன்னணி நாடுகளில் உள்ளதை போன்று நாட்டின் அபிவிருத்தி, அனர்த்தங்கள் போன்ற அவசர தேவைகளுக்கு மாத்திரம் இவர்கள் அழைக்கப் படுவர்.

இன மத பேதங்களுக்கு அப்பால் கல்வி தரம், பட்டப் படிப்புகளுக்கு ஏற்ற வகையில் கெப்டன் தரத்திலிருந்து உயர் தரங்கள் வழங்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com