இரவுநேர களியாட்ட விடுதிப் பெண் தீக்காயங்களுடன் சடலமாக மீட்பு !!
பிலியந்தலை, குடமாதுவ விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் சந்தேகத்தி ற்கு இடமான முறையில் தீக்காயங்களுடன் சடல மாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் வாடகைக்கு தனது கணவருடன் இந்தப் பெண்வாழ்ந்து வந்ததாக கூறப் படும் நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. சட லமாக மீட்கப்பட்ட பெண் இரவு நேர களியாட்ட விடுதி யொன்றில் பணியாற்றும் 36 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த மர்ம மரணம் குறித்து விசாரணைகளை மேற் கொண்டு வரும் பிலியந்தல பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கிராண்பாஸ் பொலிஸ் நிலைய த்தின் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
குறித்த பெண் அவரது வீட்டு கிணற்றின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை அவர் தீயில் எரிந்துகொண்டிருக்க நபரொருவர் நிர்வாண கோலத்தில் கிணற்றிலிருந்து நீர் அள்ளி அப்பெண் மீது ஊற்றுவதை அயலவர்கள் சிலர் கண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே கிராண்பாஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காண்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளார்.
குறித்த பெண் தானாக தீ வைத்துக்கொண்டாரா அல்லது பிரிதொருவர் தீவைத்து கொலை செய்தாரா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப் பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், சடலம் கலுபோவில வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பி ட்டது. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ள கிரேண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் காண்ஸ்டபிள் குறித்த பெண்ணுடன் தகாத உறவி னைப் பேணி வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக் காட்டியது.
0 comments :
Post a Comment