கோட்டை புகையிரத நிலையத்தில் நின்றிருந்த பிரான்ஸ் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்த பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
வெளிநாட்டு பெண்ணொருவரை கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த்தன் பேரில் கோட்டை பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை நீதவான் நீதிமன்ற மேலதிக மாவட்ட நீதவான் திலின கமகேவினால் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
நிட்டம்புவவில் வசிக்கும் எம்.டீ.அகமடோன் எனும் பெயருடைய பொலிஸ் உத்தியோகத்தரே சந்தேக நபராவார்.
கண்டி நோக்கிப் பயணிப்பதற்காக புகையிரத நிலையத்தில் காத்திருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணின் கைகளால் இழுத்து, அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக்க் கூறி, புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment