யாழ் யுவதியின் தற்கொலைக்கு காரணமான முன்னாள் புலி உறுப்பினர் தற்கொலை முயற்சி.
யாழ் அல்லைப்பிட்டியில் கடந்த 20.01.14 அன்று நித்தியா அம்முக்குட்டி என்ற பல்கலைக்கழக மாணவி தற் கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்தது. இத்தற் கொலைக்கு காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர் தொடர் அழுத்தங்களால் தற்கொலை முயற்சியில் இறங்கி தற்போது ஆபத்தை தாண்டிய நிலையில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியக்கிடைக்கின்றது.
தம்பித்துரை பிரதீபன் எனப்படும் குறித்த முன்னாள் புலி உறுப்பினரால் மேற்படி யுவதி ஏமாற்றப்பட்டமையை தாங்கமுடியாமலே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்திகள் பரவியபோது நிலைமையை சமாளிக்க முடியாமல் பிரதீபன் தற்கொலையில் இறங்கியதாக அவரது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் குறித்த விடயம் இன்று யாழ் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. பிரதீபன் கடந்த சில மாதங்களாக கொழும்பை தலைமையகமாக கொண்ட ஊடகம் ஒன்றின் படப்பிடிப்பாளராக செயற்பட்டுவருகின்றார். இதனூடாக இவருக்கு ஏற்பட்ட ஊடக உறவுகள் மேற்படி இருட்டடிப்பு காரணமாக அமைவதாக உணரமுடிகின்றது.
இவ்விடயடம் தொடர்பில் சில ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றபோது யாழ் ஊடக அமையத்தினரின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment