இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்று (05.01.2013) மாலை ஹசேமயிட் மாளிகையில் அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைனை சந்தித்தார்.
இதன் போது பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் 2007 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந் தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஒருங்கமைப்பு குழு தொடர்பாக இந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கமலா ரணதுங்க, ரொஷான் ரணசிங்க. ஜோன் அமரதுங்க, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, மற்றும் ஜோர்தானுக்கான இலங்கை தூதர் காமினி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment