வட மாகாண அமைச்சு திணைக்கள செயலாளர்கள் சிலர் விரைவில் மாற்றம்
வட மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக் களங்களின் செயலாளர்கள் பலர், விரைவில் அதிரடியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளதுடன் தற்போது மாற்றம் செய்யப்படவுள்ள செய லாளர்களின் பெயர்களை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சிபாரிசுக்காக ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அனுப்பிவைத்துள்ளதாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் சிபாரிசின் பின்னர் மாற்றம் செய்யப்படவுள்ள செயலாளர்களின் விபரங்களை உத்தியோகப்பூர்வமாக ஆளுநர் அறிவிக்கவுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபையில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படுவதில்லை என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக தெரியவந்த நிலையிலேயே தற்போது புதிதாக மாற்றம் செய்யப்படவுள்ள செயலாளர்களின் விபரங்கள் முதலமைச்சரின் சிபாரிசுக்காக ஆளுநரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment