இணையவழி அதிகம் ஆபாசக் காட்சிகளைப் பார்வையிடுவோர் இலங்கையரே! - நதீஷா ஹேமமாலீ
இணையத்தின் மூலம் அதிகமதிகம் ஆபாச படங்களைப் பார்க்கப் பழகியுள்ள நாடு இது. அதன்மூலம் எங்களுக்கு இலங்கை வாழ் மக்களின் மனோநிலையைப் புரிந்துகொள்ளவியலும் என ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரபல நடிகை நதீஷா ஹேமமாலி குறிப்பிடுகிறார்.
பத்திரிகையொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாட்டின் பிரபல நடிகைகள் அரசியலுக்கு வருவதைப் பொறுக்கவியாமல் குற்றம் சாட்டும் சில ஆண்கள் இருக்கின்றார்கள். “வெளிநாடுகளில் பெண்கள் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்ப்பதில்லை. அதற்குக் காரணம் அவர்களிடத்து கல்வி, கலாச்சாரம் போன்ற மனோநிலை யே இருக்கின்றது. அதனால்தான் அவர்கள் அதனைப் பெரிதாகக் கொள்வதில்லை.
உதாரணத்திற்கு எங்கள் நாட்டவரின் மனோநிலையைக் குறிப்பிட முடியும். வெளிநாட்டவரின் மனோநிலை வேறு. எங்கள் நாட்டவரின் மனோநிலை வேறு. அதனால்தான் எங்கள் தேசத்தவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதேபோல எங்கள் நாட்டில்தான் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவுகள் அதிகம் இடம்பெறுகின்றன. அதேபோல, மனித உரிமைகள் மீறப்படுவதிலும் முன்னணி வகிப்பது எமது நாட்டில்தான்.
இணையத்தின் மூலம் அதிகமதிகம் பாலியல் சார் காட்சிகளைப் பார்வையிடும் நாடும் இதுதான். இதன்மூலம் இலங்கையரின் மனோநிலை பற்றி எங்களுக்கு அறிந்துகொள்ளவியலும். அதனால்தான் அந்த மனோநிலையுள்ளவர்கள்தான் நடிகைகள் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கின்றார்கள், குற்றம் சுமத்துகின்றார்கள்”
(கேஎப்)
0 comments :
Post a Comment