விமானத்தின் மீது மின்னல் தாக்கம்! விமானம் நொருங்கி வீழ்ந்தது!
மின்னல் தாக்கம் காரணமாக இந்தோனேஷியாவில் விமா னமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் கள் தெரிவிக்கின்றன. சிறிய ரக விமானம் மீது மின்னல் தாக்கியதில் குறித்த விமானம் நொருங்கி வீழ்ந்ததாக சர் வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் விமானத்தில் பயணித்த 4 பேர் உயிரிழந் துள்ளனர். பப்புவா என்ற இடத்திலிருந்து மலுகு தீவிற்கு சென்ற விமானமே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குட்பட்டு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு செய்வதற்காக இரண்டு துறைசார் விஞ்ஞா னிகளும் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட மின்னல் விமானத்தின் இடது இறைக்கை மீது தாக்கியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய விமானம் தரையில் வீழ்ந்து வெடித்து சிதறியதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment