ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?
5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை 'சோம்பேறி' என்று வசை பாடுவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிரு ந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபர ப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண் ணமிருப்பர். பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்தி லிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர்.
முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து பெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.
ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும்.இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர். ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை.
துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.
ஐந்தாம் எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர் களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா? பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும்.
தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித்தரத் துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர். சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண் காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் 'கலைத்துறையில்' ஜாம்பவான்களாக இருப்பர்.
5 ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்:
வள்ளலார் - 05.10.1823
தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) - 05.05.1759
உ. சிதம்பரம் பிள்ளை - 05.09.1872
ஜவகர்லால் நேரு - 14.11. 1889
டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) - 14.11.1889
அம்பேத்கர் - 14.04.1891
சுபாஷ் சந்திரபோஸ் - 23.01.1897
திலகர் - 23.07.1856
நாளை ஆறாம் எண்காரர் பற்றி பார்ப்போம் !!!!
0 comments :
Post a Comment