அச்சுவேலி அக்கரைக் கிராம குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!
வலி-கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அச்சு வேலி பிரதேசத்தின் அக்கரைக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு அக்கரைக் கிரா மத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்ததரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கடந்த வருடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட அந்த மக்கள் வீடுகளை அமைப்பதற்காக சீமெந்துப்பைக்கற்றுக்கள் மற்றும் தகரங்கள் மற்றும் அக்கிராமத்திற்கு தண்ணீர் தாங்கி மற்றும் மீள்குடியமர்ந்த மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகளை வழங்கியதுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் சிரமதானப் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.
கடந்த வருடத்தில் மீள்குடியமர்த்தப்ப்ட்ட இந்தப் பிரதேசத்தில் குடிமர்ந்திருக்கின்ற சுமார் 48 குடும்பங்களுக்கே அரசினால் இந்த உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சில்வெஸ்டர் அலென்டின் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment