Wednesday, January 8, 2014

யாழில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண நிலைமைகள் தொடர்பாக நேரடி ஆய்வு!


யாழில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து நகரின் கடற்கரையோரங்களில் குடியிருக்கின்ற மக்களின் பாதுகாப்பு தொடர்பாக மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரும்தரப்பினர்களும் கடற்கரைக்கு விஜயம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இயற்கை அனர்த்தங்களின்போது கடற்கரையோரத்தில் குடியமர்ந்திருக்கின்ற மக்களுடைய பாதுகாப்புக்கள் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பாகவும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தங்களைத் தொடர்ந்து மாவட்டத்தின் நகர கடற்கரையோரப் பிரதேசங்களிற்கும் மாவட்டத்தின் பல்வேறு துறைசார்ந்த தரப்பினர்களும் நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

1 comment:

  1. பேந்தென்ன! இதில எவ்வளவு பொக்கட்டுக்குள்ள போட்டுக்கொள்ளலாம் என்று பார்க்கினம்.

    என்ன மக்களுக்கு ஏதாவது நிவாரணம் கொடுக்கவா போயிருக்கினம்.

    சனத்துக்கு அங்கன பாத்து கொடுத்துப்போட்டு மிச்சமெல்லாம் சுருட்டுத்தானே.

    ReplyDelete