வெளிநாட்டில் இலங்கைக்கெதிராக செய்யப்படும் பிரசாரம் பொய் என்பதை உணர்ந்தார் வெளிநாட்டு பிரமுகர் - கோத்தாபய!!
சமாதானத்துக்கு குந்தகம் செய்ய முனைந்தால் இந்த நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்ய முனைந்தால் அது இந்த நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத் தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திற்கு வியா ழக்கிழமை விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் அரசியல் பிரமுகர்களின் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட வித்தியாசமானது.
இந்த மாகாணத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பறங் கியர்கள் என பல்லின மக்களும் பல் மொழிகளைப் பேசுகின்றவர்களும் வாழ்கின் றனர். ஒன்றுபட்ட அபிவிருத்தியும் நல்லிண க்கமும் இங்கு மேற்கொள்ளப்பட்டு ள்ளது. ஜனாதிபதி 2005 ஆம் ஆண்டு இந்த நாட்டை பொறுப்பேற்றதிலிருந்து குறுகிய காலத்துக்குள் மக்களுக்கான சபீட்சமும், அபிவிருத்தியும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை நிலை நாட்ட ஒவ்வொரு பிரஜையும் பாடுபட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலை மையிலான இந்த அரசாங்கம் கடந்த 4 வருட குறுகிய காலத்துக்குள் யுத்தத்தை முடித்து வட மாகாணத்தில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை குடியமர்த்தி புனர் வாழ்வளித்து அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது. பல இராணுவ முகாம்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் எந்தவொரு கெடுபிடியுமின்றி சுதந்திரமாக எங்கும் சென்று வரக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களை பார்க்கும் போது வடமாகாண மக்கள் ஜனாதிபதி தேர்தலில் 5 வீதமும், பின்னர் பாராளுமன்ற தேர்தலில் 12 வீதமும், அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 45 வீதமும், கடைசியாக நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 72 வீதமும் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அச்சமின்றி வாக்களிக்கின்ற சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தம் ஒன்றின் போது உயிரிழப்புக்களும், பொருளாதார இழப்புக்களும் ஏற்படுவது சாதாரணமாகும். எனினும் இந்த நாடு குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்பப் பட்டுள்ளது. பல தியாகங்களுக்கு மத்தியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதா னத்தை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.
சமாதானத்திற்கு அநீதி இழைக்க முற்படுவதானது பாரதூரமான குற்றமாகும். 30 வருட கால யுத்தத்திற்கு பின்பு இந்த நாட்டில் வீதி, மின்சார அபிவிருத்தி என பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரச்சினைகளை வன்முறை களால் தீர்த்துக் கொள்ளாமல் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் அனைவரும் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக சுபீட்சமாக வாழ்கின்றனர். அண்மையில் அமெரிக்க பிரஜை ஒருவர் என்னிடம் நாட்டை எவ்வாறு கொண்டு செல்கியர்கள் என கேட்ட போது எங்களுக்கு புத்தி சொல்லத் தேவையில்லை. எங்களது நாட்டில் புத்திஜீவிகள் இருக்கின்றனர்.
எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்வோம் என கூறினேன். 45 வருட அரசியல் அனுபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குண்டு அதேபோன்று ராஜ பக்ஷ குடும்பத்திற்கு 75 வருட அரசியல் ஈடுபாடு உண்டு. இந்த அனுபவங்களை கொண்டு இந்த நாட்டை கொண்டு செல்கின்றோம். எமது தூர நோக்கு சிந்தனை மஹிந்த சிந்தனையாகும். இந்த நாட்டின் கௌரவத்துக்கு கரிபூசி நாட்டிற்கு அபகீர்த்தியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் தமது மத கடமைகளை செய்வதற்கு தடையுள்ளது என பிரசாரம் செய்யப்படுகின்றது. அண்மையில் இலங்கை வந்த வெளிநாட்டு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் அவர் தங்கியிருந்த போது தொழுகைக்கான பாங்கு சொல்லும் சப்தம் கேட்டுள்ளது.
அப்போது அவர் வெளிநாட்டில் இலங்கைக்கு எதிராக செய்யப்படும் பிரசாரம் பொய் என்பதையும் இங்கு அனைவருக்கும் பூரண மத சுதந்திரமுண்டு என்பதையும் அறிந்து அதை கூறினார். இங்கு அனைவரும் தமது மத கடமைகளை மேற்கொள் வதற்கான அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பில் சேரிப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக 20000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 500 வீடுகள் அமைக்கப்பட்டு கூடுதலான வீடுகள் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவதாக தான் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து முஸ்லிம்களையோ, தமிழர்களையோ நாம் துரத்த வில்லை. கிழக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களுமுண்டு. இந்த கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை உட்பட அனைத்து அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment