யாழில் லஞ்சம் பெற்ற புகைப்பரிசோதனை ஊழியரகள் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகளிடம் சிக்கினர்!
சுன்னாகம் பகுதியில் உள்ள வாகனப் புகைப்பரிசோதனை மேற்கொள்ளும் நிலையம் ஒன்றில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வாகனங்களின் புகைப் பரிசோதனைச் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு கொழும்பில் இருந்து வந்த உயர் அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இலஞ்சம் பெற்ற இரு ஊழியர்களும் விசாரணையின் பின்னர் குறித்த நிறுவனத்தில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இந்த வாகன பரிசோதனை நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை பரிசோதனை செய்ய ஒரு அரச ஊழியர் சென்றுள்ளார் இவருடைய வாகனத்தை பரிசோதனை செய்த ஊழியர்கள் வாகனத்தில் பிழை இருப்பதாக கூறியதுடன் குறிப்பிட்ட வாகனம் புகைப்பரிசோதனையில் சித்தியடையவில்லை யென்ற சான்றிதழையும் வழங்கியுள்ளார்கள்.
சான்றிதழை பெற்ற அரச ஊழியர் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு பழுதுபார்ப்பதற்காக புறப்பட்ட போது மேற் குறிப்பிட்ட ஊழியர்களில் ஒருவர் அவரிடம் வந்து தாம் இதனை சரி செய்து தருவதாகக் கூறி 450 ரூபா பணத்தை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சற்று நேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் எந்தவிதமான திருத்தமோ அல்லது வேறு எந்த மாற்றமோ சொய்யாமல் புகைப்பரிசோதனை செய்யப்பட்டு அதில் சித்தியடைந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறிப்பிட்ட புகைப்பரிசோதனை நிலையத்தின் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட் குறித்த அரச அதிகாரி தனக்கு நடந்ததை முறைப்பாட பதிவு செய்ததன் அடிப்படையில் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து லஞ்சமாக பெறப்பட்ட 450 ரூபா பணத்தை மீண்டும் உரியவரிடம் கொடுத்ததுடன் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் தமது நிறுவனத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment