தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மகஜர்!
வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை தடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் வவுனியா மாவட்ட கிராமஅமைப்புக்கள் ஒன்றிணைந்து தமது மகஜர்களை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி மோகனதாஸ்சிடம் கையளித்துள்ளனர்.
சுந்தரபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் கொடுத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எமது கிராமம் மிகவும் வறுமைக்கு உட்பட்ட கிராமம் என்பதுடன் எமது மக்கள் 1996 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 4 வருடங்களாக வசித்து வந்த நாம் 2011 ஆம் ஆண்டுக்குப் பின் தற்காலிக குடியேற்றம் செய்யப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரை எவ்வித வீடுகளும் எமக்கு கட்டித்தரப்படவில்லை.
ஆனால் தற்போது எமக்கு இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூலம் புள்ளி வழங்கல் அடிப்படையில் எமது கிராமம் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று வவுனியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது எமக்கு கிடைத்துள்ள வீடுகளை பறிமுதல் செய்யும் ஒன்றாகவே நாம் கானுகின்றோம் எனவே எமது கிராமத்தின் தெரிவில் அமைச்சரும், அரச அதிகாரிகளும் எவ்வித செல்வாக்கினையும் செலுத்தவில்லை, அந்த தெரிவு முறையானதாகவே நடைபெற்றுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்ளவிரும்புகின்றோம்.
மேலும் நேற்று நடத்தப்பட்டது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவாளர்களை கொண்டு பொறுப்பற்ற முறையில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனில், அதற்கு எதிராக நாங்களும் வீதியில் இறங்கி நியாயத்துக்காக குரல் எழுப்ப நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
இறுதியில் இந்த வீடமைப்பு திட்டத்தை எமக்கு தந்த இந்திய அரசாங்கத்துக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment