Thursday, January 9, 2014

பூமிக்கு அருகே சுற்றிவரும் அபாயகர விண்பாறை!


விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து நாசாவுக்கு விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வரும் நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை இந்த செயற்கைக்கோளை அனுப்பிவைத்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை படம்பிடித்துள்ளது இந்த விண்கலம். இதேவேளை இந்த விண்பாறையை அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இதனை உறுதிசெய்துள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment