ஆசிய - பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்கா கவனம்: ஒபாமா உரை
ஆசிய - பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்கா தொடர்ந்து கவனம் செலுத்தும் என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய பராக் ஒபாமா, வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார்.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்த தோழமை நாடுகளுக்கு தொடர்ந்து கை கொடுப்போம் என்றார். மேலும் இப்பகுதிகளில் இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்படும், பிலிப்பைன்சில் போது தேவையான உதவியை செய்வோம் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக செல்வதால், அந்த பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புதிதாக ஏதேனும் பொருளாதார தடைகள் முன்மொழிந்தால் வீட்டோ அதிகாரம் கொண்டு அதனை முறியடிப்பேன் என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதியில் திரும்பப்பெறப்படும் என்றும், அதன் பின்னர் சிறிய அளவிலான அமெரிக்கப் படைகள் ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மட்டும், அங்கேயே தங்குவார்கள் என்றார். இருப்பினும் ஆப்கனில் இருக்கப் போகும் அமெரிக்கப் படையின் அளவு குறித்து ஒபாமா ஏதும் தெரிவிக்கவில்லை.
பொருளாதார நிலை குறித்து பேசுகையில் ஒபாமா சீனா பற்றி பேசினார். ஆனால் முழு உரையிலும், இந்தியா தொடர்பாக ஒபாமா ஏதும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
0 comments :
Post a Comment