சோமவன்சவை தலைமைப் பதவியிலிருந்து நீக்கத் தீர்மானிக்கிறது ஜேவிபி!
சோமவன்ச அமரசிங்கவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலக்கி, வேறொருவரை தலைவராக நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சம்மேளனத்தின் போது, புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக அறியவருகின்றது.
தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கின்ற டில்வின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக தெரிவுசெய்யப்படுவதற்கான நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன என ஜேவிபியுடன் நெருங்கிய தொடர்புடைய செய்திகள் தெரிவிக்கின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment