Wednesday, January 22, 2014

அன்று ஆயுதங்களை வழங்கிய பயங்கரவாதி இன்று எதை கொடுத்தாலும் பிராயச்சித்தமாகுமா?

புலிகள் சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டனர் என்பதும் சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர் என்பதும் யாரும் அறிந்த உண்மை. புலிகளின் மேற்படி செயற் பாட்டுக்காக புலிகள் சிறுவர் நலன்சார்ந்த அமைப் புக்களின் கண்டனத்திற்கும் உட்பட்டிருந்தனர்.

புலிகளின் மேற்படி சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மூலகாரணமான ஆயுத விநியோகத்தை மேற்கொண்டுவந்த முன்னாள் பயங்கரவாதியான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் தற்போது ஆயுத வன்செயலினால் ஆநாதைகளாக்கப்பட்டுள்ள சிறுவர்களை பாராமரித்து வருகின்றாராம்.

அன்று பிரபாகரன் தனது பிரச்சாரத்திற்காக செஞ்சோலை சிறுவர்களுடன் நின்று படம்காட்டிய பாணியில் இன்று கேபி படம்காட்டி வருகின்றார்.

கடந்த திங்கட்கிழமை தனது புதிய பிழைப்புக்கான 1 வருட பூர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடியும் இருக்கின்றார்.

இங்கு அநாதைகளாக கைகட்டி வாய்மூடி நிற்கின்ற சிறார்களில் பலரது பெற்றோர் கே.பி அனுப்பிய ஆயுதங்களை தூக்கி போர்முனையில் மடிந்தவர்கள். அவர்களின் பிள்ளைகளை வைத்து இன்று படம்காட்டப்படுகின்றது.

இங்குள்ள படத்தை பார்க்கின்றபோது அன்று ஆயுதங்களை வழங்கிய கையால் இன்று எதை கொடுத்தாலும் பிராயச்சித்தமாகுமா?





இதேநேரம் கேபி யின் பிடியிலிருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஆநாதையான யுவதி ஒருத்தி ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோரியுள்ளதுடன் பல்வேறு முரண்பாடான தகவல்களை வழங்கி வருகின்றார்.

குறித்த யுவதியை ஐரோப்பிய நாட்டிலுள்ள இளைஞன் ஒருவர் திருமணம் செய்வதற்கு என்று அழைத்ததாகவும் அந்த ஏற்பாட்டை கே.பி யே செய்ததாகவும் பேசப்படுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com