பொன்சேக்கா பிரபாகரனின் தலையாட்டி பொம்மையே!
பிரபாகரனின் தலைமயிரொன்றின் தரத்திற்கேனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெறுமதியற்றவர் எனக் குறிப்பிடும் சரத் பொன்சேக்கா, பிரபாகரனின் தலையாட்டி பொம்மையாக மாறியுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி, கலாச்சார, தகவல் தொடர்பு அமைச்சர் கே.எச். நந்தசேன குறிப்பிடுகிறார்.
பதவிய மக செத்புர வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பொன்சேக்கா நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போது, இந்நாட்டின் ஜனாதிபதி கையாலாகாதவர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் அன்று அவர்களின் குடும்பங்களுக்கு அநியாயம் செய்யவில்லை என்பது உண்மைதான்.
என்றாலும், பிரபாகரன் என்பவர் இந்நாட்டு மக்களை உயிருடன் பச்சை பச்சையாக கொலை செய்த மிலேச்சத்தனம்மிக்க கொலைகாரன். பௌத்த மதகுருமார்கள், பொதுமக்கள், சின்னஞ் சிறுவர்கள் போன்றோருக்கு பல்வேறு வழிகளில் இன்னல்கள் விளைவித்து, துன்புறுத்தி கொலை செய்தவன்.
இந்த முப்பது ஆண்டுகால யுத்த்த்தில் அழிந்தவர்கள் எங்களது அப்பாவிச் சனங்கள். அவ்வாறான கொலைகாரனைப் பார்த்துத்தான் இன்று சரத் பொன்சேக்கா சிறந்த தலைவர் என்று சொல்கிறார்…
ஜனாதிபதி இந்நாட்டு அப்பாவிச் சனங்களுக்காக இந்நாட்டை சுதந்திரமயமாக்கி, அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு செல்கின்றார். அவர் ஒரு உத்தம புருஷர்“ எனவும் அவர் அங்கு தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment