ஒட்டுகேட்பதற்கு தடை விதித்தார் ஒபாமா!
அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது முதலான உளவு நடவடிக்கைகளில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்கள் ஈடுபடுவதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தடை செய்துள்ளார்.
ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் மற்றும் பிரேஸில் ஜனாதிபதி டில்மா ரௌசெப் முதலானோரின் தொலைபேசியை அமெரிக்க தேசிய புலனாய்வு முகரகம் ஒட்டுக்கேட்டதாக கடந்த வருடம் தகவல்கள் வெளியாக சர்ச்சை ஏற்படுத்தியருந்த நிலையில் இன்று நிகழ்த்திய உரையொன்றில் நட்பு நாடுகளின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பதை தடை செய்யும் கொள்கை குறித்து ஜனாதிபதி ஒபாமா அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment