Friday, January 10, 2014

கண்ணி வெடிகளுக்கு மேலாக நடந்து சென்று பிரபாகரனை அழித்தோம்! ஆனால் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு உயிர்கொடுக்க முயற்சி !

கண்ணி வெடிகளுக்கு மேலாக நடந்து சென்று பிரபாகரனை அழித்தோம் எனவும், ஆனால் அழிந்து போன பயங்கரவாத த்திற்கு யாழ். மன்னார் ஆயர்கள் மீண்டும் உயிர் கொடுக் கின்றனர் எனவும், இந்த இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள் என பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்தார்.

எனவே இவ்விருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டு மென தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன் எந்தவொரு விசாரணைகளை நடத்தும் தகுதி எமக்கு உள்ளது. எனவே சர்வதேச விசாரணைகள் அவசியமில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

எமது படையினர் மனிதாபிமான யுத்தத்தையே மேற்கொண்டனர். எமது கடற் படையினர் பலரை கொன்ற புலிகளின் கடற்படையின் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகளை இறுதி யுத்தத்தில் கடற்படையினர் கைது செய்தனர். இது யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு எதிராக எதனையும் செய்திருக்கலாம். ஆனால் எமது படை யினர் அவர்களை பாதுகாத்தனர். இன்று அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ்கின் றனர்.

அதே போன்று தான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் மக்களை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு சுற்றிவர கண்ணிவெடிகளை புதைத்து இராணுவத் தினர் மீது தாக்குதல் நடத்தினார். எமது படையினர் நினைத்திருந்தால் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக கண்ணி வெடிகளுக்கு மேலாக நடந்து சென்று பிரபாகரனை அழித்தனர். மக்களை பாதுகாத்தனர்.

இதனால் எமது படையினர் கால்களை இழந்தனர். புலிகள் மக்களை, புத்திஜீவிகளை கொன்றனர். சிறுவர்களை படைக்கு சேர்த்தனர். அப்பொழுதெல்லாம் இந்த ஆயர் கள், சுமந்திரன், கூட்டமைப்பினர் எங்கே இருந்தனர்.

யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் புதைத்து வைத்த 5 இலட்சத்திற்கு மேலான கண்ணி வெடிகளை எமது படையினரே உயிரை பணயம் வைத்து அகற்றினர்.

மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்தனர். அடிப்படை வசதிகளை ஏற்படுத் தினர். இதன் போது கூட்டமைப்பினரோ ஆயர்களோ ஏதாவது உதவிகளை செய் தார்களா? ஒன்றும் செய்யவில்லை. அவ்வாறானவர்கள் இன்று அமெரிக்காவின் பிரிவினைவாதத்திற்கு துணை போகின்றனர். பயங்கரவாதத்தை உருவாக்க முயல் கின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படவில்லை. மாறாக அதற்கு எதிரானவர்களாகவே செயல்படுகின்றனர்.

நாட்டுக்கு எதிரானவர்கள் தான் பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளுக்கு அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாதது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் குற்றவியல் நீதிக் கான பணியகத்தின் போர் குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் தலைமையிலான குழுவினரிடம் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

4 comments :

Arya ,  January 10, 2014 at 8:08 PM  

கொடுங்கோலன் பிரபாகரனிடம் இருந்து தமிழ் மக்களை காக்க சிங்கள இளைனைர்கள் செய்த தியாகம் போற்றுதற்குரியது , பிரபாகரன் உயுருடன் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் இலங்கையில் உயிர்கள் அழிந்தன , அவன் அழிக்க பட்ட பின் , அப்படி பட்ட நிலை இன்று இல்லை.
நாட்டை அந்நியர்களிடம் காட்டி கொடுக்கும் இவனை போன்ற சகல மேற்கத்தைய உளவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இவன் மத குரு அல்ல பாதர் அங்கி போட்ட கிரிமினல்.

Anonymous ,  January 10, 2014 at 9:52 PM  

ஆயர்களுக்கு வெளிநாட்டு ஆசை வந்து விட்டது.

மகா தமிழ் ஈழம் ,  January 10, 2014 at 10:34 PM  

இந்த இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள் என்பது உண்மை உண்மை உண்மை.

Vani Ram ,  January 13, 2014 at 2:54 AM  

இவங்கள் காட்டி கொடுத்ததுக்கு நல்ல அடி ஹிக்கடுவவில் விழுந்துள்ளது. இப்படி போன்ற துரோகிகளை சும்மா விடக் கூடாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com