மன்னார் மனித புதை குழியின் எல்லையை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது - சட்ட வைத்திய நிபுணர்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல் லையை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அநுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் ஜீ.எல்.வைத்தியரத்ன தெரி வித்தார்.
மன்னார் மனித புதை குழி 10வது தடவையாக நேற்று தோண்டப்பட்டது. இதிலிருந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளுக்குரியவர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படுமென்றும் வைத்தியரத்ன தெரிவித்தார்.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் நேற்று 10 வது தடவையாக இம்மனித புதை குழி அகழும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. எலும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்படுவதாகவும் அதில்வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்த டாக்டர் வைத்தியரத்னம் புதிதாக தோன்றும் புதை குழிகளில் எச்சங்கள் கண்டு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் துண்டுகளாகவும் மீட்கப் பட்டுள்ளன. இன்று தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
0 comments :
Post a Comment