மண்டயன்குழு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் இனவாதத்தை தூண்ட முயற்சி: இந்திய நடிகர்களை விஞ்சிவிட்டதாகவும் குற்றச்சாட்டு
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடி சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மண்டயன் குழு உறுப்பினர் துரைராஜா ரவிகரன் மக்கள் மத்தியில் இனவாத துவசத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனது எம்ரி நயின்ரி மோட்டர் சைக்கிளில் மகனுடன் வலம் வரும் ரவிகரன் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழுகின்ற சிங்கள மக்களை விரட்ட வேண்டும் என இனவாதம் பேசி மக்களை குழப்பி வருகின்றார். யுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் தமது இருப்புக்காக இனவாதத்தைக் கூறி தமிழ் மக்களை திசை திருப்பி வருகின்றார்.
அங்குள்ள சிங்கள மக்களை தமிழ் மக்களும் தானும் இணைந்து அடித்து விரட்டுவதாக ஊடகங்களில் கூறிவருகின்றார். இதனால் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை வலுவடைந்து செல்கின்றது. தற்போது இலங்கையின் எப் பகுதியிலும் வாழக்கூடிய மற்றும் சென்று வரக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ரவிகரன் போன்றோர் தமது அரசியல் இருப்புக்காக பச்சோந்தித் தனமாக நடந்து கொள்வதும் ஊடகங்களில் அறிக்கை விடுவதும் ஒட்டு மொத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்கள் எதிர்பது போன்றும் காட்டுவதும் சிங்கள மக்களுடனான இனநல்லுறவுக்கு பாதகமாக அமையும் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்பாடுகள் அற்ற இவரது வெட்டி அறிக்கைகள் நடிப்பில் தென்னிந்திய கலைஞர்களை விஞ்சிவிடுவாரா? என எண்ணத் தோன்றுவதாக முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment