உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அற்புதம் ; காத்தான்குடியில் சம்பவம் !!
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காலை உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப் பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, காத்தான்குடி பி.ஜே.எம்.வீதியிலுள்ள மர்சூக் என்பவரின் வீட்டில் காலை உணவுக்கான ரொட்டி தயாரிக்கப்பட்ட வேளை ரொட்டியை தயாரித்து முடிந்த பிறகு அந்த ரொட்டியின் மேல் பகுதியில் அல்லாஹ், முகம்மத் என காணப்பட்டுள்ளது. இதையடு த்து இந்த ரொட்டியை சாப்பிடாமல் விட்டுள்ளனர்.
இந்த ரொட்டியை தயாரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்கவில்லை யெனவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்டவுடன் தான் அதிர்ச்சியடைந்ததா கவும், இது ஒரு அற்புதமாகும் எனவும் இந்த ரொட்டியை தயாரித்த அந்த வீட்டின் சகோதரி தெரிவித்தார். இதை பலரும் அந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
இது போன்ற முட்டாள் சம்பவங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த பெறுமானங்களுமில்லை. ஏதோ ஒரு வீட்டில் சுடும் ரொட்டி சற்று கரித்து விட்டால் அதுவும் அகஸ்மாத்தாக மொழியொன்றின் அமைப்பில் அதுவும் தெளிவான எழுத்துக்களல்லாமல் இருந்தும் இது ஏதோ இறைவனின் அதிசயம் என்று பறைகொட்டுவது அறிவீனமே அன்றி அறிவு சார்ந்த விடயமல்ல. இதன் மூலம் யாரும் விளம்பரம் தேட முயற்சிப்பது இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தும் காரியமல்ல என்பதை சம்பந்தப்படவர்கள் உணர வேண்டும்.
Post a Comment