டக்ளஸ் தேவானந்தா + ஆனந்தசங்கரி + சிறிதரன் + உதயராசா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி
தமிழ் மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்று உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கலந்துரையாடலில் சகோதர படுகொலைகளால் திக்குமுக்காடி நிற்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும் மூர்த்திகளின் நிகழ்ச்சி நிரலில் கொண்டம் சிறிதரனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, மண்டயன்குழுத் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தமது இருப்பாக தன்னுடன் இணைக்க விரும்பாத ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் சுகு சிறிதரன், பவுடர் செல்வத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சிறிரெலோ அமைப்பினைச் சேர்ந்த ப.உதயராசா, வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தமிழழகன், மாநாகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடல் ஆனது யாழ். நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(11) பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்று இவ் அரசியல் கட்சிகள் கூட்டினைந்து பலமான கூட்டணி ஒன்றினை உருவாக்கி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. இக் கலந்துரையாடலுக்கு புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் சாட்டுப் போக்குகளைக் கூறி இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments :
This all waste peoples
kuththukkaranam
ஆனந்தசங்கரி , சிறிதரன் போன்றோர் புலி வால் TNA யின் காலின் விழுந்தும் அவர்களால் அவமான படுத்தப்பட்டு எட்டி உதைக்க பட்டு துரத்த பட்ட பின்பும் மான ரோசம் இல்லாது இன்னமும் அரசியலில் இருப்பதுடன் புது கூட்டு அமைத்து மக்களை மீண்டும் புது முகத்துடன் ஏமாற்ற தயாராகின்றார்கள்.
Post a Comment