சாய்ந்தமருதை சேர்ந்த இளைஞன் பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
கல்முனை சாய்ந்தமருதை சேர்ந்த உதுமாலெப்பை முக மட் அப்சான் என்ற 20 வயதுடைய இளைஞன் பயண ப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் சாய்ந்தமருது 2ஆம் பிரிவு காரியப்பர் வீதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் 12.00 மணியளவில் சாய்ந்தமருது தோணா பகுதியில் பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் 21ஆம் திகதி காணாமல் போன முகமட் அப்சான் என உறுதிபடுத்தியுள்ளனர்.
மேற்படி இளைஞன் தொழில்வாய்ப்பிற்காக கட்டார் நாட்டிற்கு இன்று வெள்ளிக் கிழமை செல்ல இருந்ததமை இருந்தமை குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment