முறைகேடான வைத்தியத்தால், உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள இளைஞன் – மட்டக்களப்பில் சம்பவம் !!
இடப்பக்க நுரையீரலில் கட்டு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 வயதுடைய கல்லடியைச் சேர்ந்த இ.பிரதீப்குமார் என்ற இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஐ.சீ.ரியூப் சிகிச்சை இடப்பக்கத்துக்குப் பதி லாக வலப்பக்கம் குழாய் பொருத்தப்பட்ட சம்பவம் மட்ட க்களப்பு போதா வைத்தியசாலையில் இடம் பெற்றுள் ளது. கட்டாரிலிருந்து வந்த மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த குறித்த இளைஞருக்கு இடப்பக்க நுரையீரலில் கட்டு ஏற்பட்டு கடந்த 31.12.2013 ஆம் திகதி இன்ரர் கோஸ்ரல் ரியூப் எனப்படும் சிகிச்சைக்காக சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று குறித்த குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
மறுநாள் புது வருடதினத்தன்று, 31ஆம் திகதி சோதனை செய்கையில் அது பக்கம் மாறி மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவரவே அன்று மீண்டும் சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று இடப்பக்கம் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 02.01.2014ஆம் திகதி வலப்பக்கம் பொருத்திய குழாய் அகற்றப்ப ட்டுள்ளது.
குறித்த சிகிச்சை என்பது. நெஞ்சுப் பகுதிக்குள்ளால் ஒரு துழை இட்டு குழாயை உள்ளே செலுத்தி நுரையீரலில் குழாயைப் பொருத்தி கட்டு ஏற்பட்டதனால் உருவாகியுள்ள அழுக்கான இரத்தத்தை (சீழ்) வெளியே எடுப்பதற்காக மேற்கொள்ள ப்படுவதாகும்.
தற்போதைய நிலையில் பாதிக்கப்படாதிருந்த நுரையிரலிலும் துழையிடப்பட்ட நிலையே நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இந்த அறுவைச் சிகிச்சையை மருத்துவர் தம்பவிட்ட மேற்கொள்ள இருந்த நிலையில் அவருக்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட விடுதி மருத்துவ உத்தியோகத்தர் (R.H.O) ஒருவரே அந்த சத்திர சிகிச் சையை மேற்கொண்டிருந்தார். இதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இரண்டு பக்கமும் இந்தச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக தகவல் உறவினர்களுக்குச் சொல்லப்படுவதாக தெரிகிறது. இதேபோன்று பல முறைகேடான சம்பவங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம் பெறுவதால் நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த வைத்தியசாலைக்கு சிகி ச்சைக்கு செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.
0 comments :
Post a Comment