யாழ்.தமிழ் பெண்களும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ளப்படும்- யாழ் கட்டளை தளபதி!
கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விஷேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிக்கு பதில் அளிக்கும் போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் யாழில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இல்லை பாதுகாப்புக்காகவே இராணுவம் இங்கு நிலைகொண்டுள்ளது அங்கு இராணுவத்திற்கு தேவையான காணிகள் எடுக்கப்பட்டு ஏனையவை மக்களிடம் விரைவில் கையளிக்கப்படும் என்பதுடன் தற்போது யாழில் இருந்த மினி முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றது இது துரிதப்படுத்தப்பட்டு விரைவில் அனைத்து மினி முகாம்களும் அகற்றப்பட்டு விடும் எனத் தெரிவித்தார்.
இதனைவிட கிளிநொச்சியில் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைத்து கொண்டது போல எதிர்காலத்தில் யாழ்ப்பாண தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment