இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் சவுதி அரேபியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங் கையர்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்த மொன்றை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் தீர்மானித் துள்ளது. இதற்கிணங்க இம்மாதம் 14ம் திகதி சவுதி அரேபியாவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சின் செயலாளர் நிஷங்க விஜயரத்ன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடு வதற்காக இம்மாதம் 12ம் திகதி சவுதி அரேபியா செல்லவுள்ளனர்.
வீட்டுப் பணியாளர்களாக செல்லும் ஆண், பெண் இரு சாராரதும் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உறுதி, மருத்துவ வசதி உட்பட 6 வகையான ஒப்பந்தங்கள் கைச் சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை சவுதி அரேபியாவுடன் இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment