தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காமத் தந்தை கைது! யாழ் அளவெட்டியில் சம்பவம்!
யாழ். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய குடும் பஸ்தர் ஒருவர் தனது 13, 14 வயதுடைய இரு மகள்க ளையும் பாலியல் துஷ்பிரயோகம் உட்படுத்திய குற்றச் சாட்டில் நேற்று தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய் யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து எங்கள் தந்தை எங்களை பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தி வருவதாக குறித்த சிறுமிகள் தெல்லிப்பளை சிறுவர் நன்நடத்தைப் பிரிவிற்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து தெல்லிப்பளை சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கந் இது தொடர்பாக பொலி ஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்
பாதிப்புக்குள்ளான சிறுமிகளை யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிப் பதுடன் அவர்கள் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment