படையினருக்கும் மன்னார் மனித புதைகுழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது- தயா ரட்நாயக்க!
மன்னார் மனித புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவு அளிக்கப்படும் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார் நீதவானின் முன்னிலையில் குறித்த புதைகுழி தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இது வரைக்கும் 36க்கும் மேற்பட்டவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment