நீங்கள் ஆறாம் எண்ணில் பிறந்தவர்களா?
இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனு பவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத் துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர். எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக் காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான்.
இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர். எதற்கும் அஞ்சாத இவர்கள் கண்ணாடியில் அடி க்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத் தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடு அழகுச் சாதனங்களை எடுத்துச் சென்று காரிலிருந்து இறங்கு முன் ஒப்பனை போட்டுக்கொண்டு தன்னை அழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர்.
காதல், களியாட்டங்களில் அதிக ஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இற ங்குவர். இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர்.
இவர்கள் நினைப்பதுதான் சரி என்று சொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். இதனால் இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத் தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.
பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமை உண்டு. பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்பட நேரிடலாம். உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள்.
இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வு முழுக்க பல மனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும் போது 3ஆம் எண் சம்பந்தப்படாமல் பார் த்துக்கொள்வது நல்லது.
6ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
மகான் அரவிந்தர் : 15.08.1872
அண்ணாத்துரை : 15.09.1909
காமராஜர் : 15.07.1903
ஜெயலலிதா : 24.02.1948
ஆறாம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை செய்யும் எழுத்து : U,V,W,R,K,B
நன்மை செய்யும் தேதி : 2,6,9,11,15,18,20,24,27,29
நன்மை செய்யும் கிழமை : வெள்ளி, திங்கள், செவ்வாய்
நன்மை செய்யும் நிறம் : வெள்ளை, இளம் ரோஸ்
நன்மை செய்யும் திசை : மேற்கு
நன்மை செய்யும் தொழில் : சினிமா, புடைவை, எழுதுகருவி, நகைக்கடை, வீடு விற்பது, பிளாஸ்டிக் ஏற்றுமதி, இறக்குமதி
ஏழாம் எண்காரர் பற்றி நாளை பார்ப்போம் !!!!
1 comments :
இது எதோ ஜெயலலிதாவை பற்றி எழுதியதாக தோன்றுகின்றது, 1000 ஜோடி செருப்புகள் மக்கள் பணத்தில் வைத்திருப்பார்கள் எனவும் எழுதியிருந்தால் இச்சாஸ்திரம் உண்மை என நம்பலாம்.
Post a Comment