ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் என்ற செய்தியில் உண்மையில்லை- குடிவரவு குடியகல்வு அதிகாரி
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய ஆதரவு இணையங்கள் வெளியிட்ட செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல தமிழ் தேசிய வாத இணையங்கள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி தொடர்பாக வினவியபோதே அவர் இதனை தெரிவித்ததுடன் இது அரசாங்னத்தின் மீது சேறு பூசுவதற்காக தமிழ் தேசிய இணையங்கள் வெளியிட்டுள்ள வதந்திகளே எனக்குறிப்பிட்டார்.
மேலும் இவர் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் எம் அதிகாரிகள் சில விசாரணைகள் நடத்தியிருக்கலாம் ஆனால் நாம் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக வெளியான செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது என்பதை மட்டும் எம்மால் உறுதிபட கூற முடியும் என குடிவரவு குடியகல்வு அதிகாரி தெரிவித்தார்.
2 comments :
பொய் வதந்திகளை பரப்புவது, பொறுக்கமுடியாத சுயநல கோமாளிகளின் சேட்டைகளில் ஒன்று. முக்கியமாக, புலிப்புராணம் பாடி தங்கள் சுயநலத்தை பார்க்கும் கூட்டத்தை விட்டு விலத்தி நடந்தால் மட்டுமே கனடிய எம்.பி மேல் மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படும்.
அத்துடன் போரில் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் மக்களுக்கு நல்ல விடயமாக ஏதாவது செய்தால் வரவேபுக்குரியது.
அதைவிட்டு சில தமிழ் அரசியல் கோமாளிகளுடன் சேர்ந்து மக்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுத்தால் கனடாவுக்கே மரியதை போய்விடும்.
ராதிகா MP யோசித்து நடப்பார் என நம்புகிறோம்.

Post a Comment