மரண தண்டனை, ஆயுள் தண்டனை, மற்றும் நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் தமது தண்டனையை அமுல்படுத்துமாறு அல்லது தளர்த்து மாறு கோரி போகம்பர சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி உண்ணாவிரதத்தை கடந்த 3ம் திகதி ஆரம்பித்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகளை போன்று ஒரு சில அரசியல் வாதிகளும் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வருகை தந்தால் உண்ணா விரதத்தை கைவிட விரும்பு வதாக இவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்த துடன், நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட இணக்கம் தெரிவித்தனர். கூரையிலிருந்து இறங்கி உணவு உட்கொண்ட துடன் 3 சிறைக்கைதிகள் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் இவர்கள் தொடர்பில் கலந்துரையாடி வழங்க கூடிய உயரிய நிவாரணங்களை வழங்க முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
பிரதி அமைச்சர் சரத் சந்திரசிறி முத்துகுமாரன பாராளுமன்ற உறுப்பினரான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, ஆகியோர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இவர்களுடன் இன்று நாம் பேச்சு வார்த்தை நடத்தினோம். இவர்களின் கோரிக்கையடங்கிய கடிதத்தை நாம் ஜனாதி பதியிடம் கையளிக்கவுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாம் நிலைமை தொடர்பில் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சர், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் அகியோர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இவர்களிடம் இது தொடர்பில் அறிவுறுத்தியதன் பின்னர் இணக்கம் எட்டப்பட்டது. இவர்களது கோரிக்கைகள் தொடர்பில் துரித தீர்வுகளை எட்டுவதே எமது நோக்க மாகவுள்ளது என கைதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து ள்ளனர்
No comments:
Post a Comment