தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல்!
பௌத்த தேரர் ஒருவர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வில்கமுவ பிர தேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியி ட்ட வண. உடுவெல சுமித தேரர் மீதே வில்கமுவ பிர தேசத்தில் வைத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
குறித்த தேரர் கங்காசிரிகம விஹாரைக்கு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டி ருந்த போது மதுபோதையில் இருந்த நபரே தேரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேரர் மீதான தாக்குதலை கண்டித்து வில்கமுவ மற்றும் ஹெட்டிப்பொல மக்கள் கறுப்புக்கொடிகளை கட்டியதுடன் கடைகளையும் பூட்டினர் தாக்குதலுக்கு உள்ளான பிக்கு வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment