Thursday, January 30, 2014

இளைஞனின் உயிரைப் பறித்த அவுஸ்திரேலிய பயண ஆசை!!

மட்டக்களப்பு சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். சித்தாண்டி, விபுலா னந்தர் வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் குணநாயகம் ( 33 ) என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். குறித்த நபர் நேற்று இரவு நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச் சைக்குப் பலனின்றி இன்று பகல் உயிரிழந்துள்ளதாக மட்டக் களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக பணம் செலுத்தியும் செல்ல முடியாத காரணத்தினாலும், தொழில்வாய்ப்பின்றி இருந்தமையினாலும் மன உளைச்சலுக்காளாகி தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com