எங்களிடம் நடிகைகள் இல்லை… நடிகர்கள் மட்டுமே! – பொன்சேக்கா
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.
தங்கள் கட்சியிலிருந்தும் தேர்தலில் நடிகர்கள் நிறுத்தப்படுவார்கள் எனக்குறிப்பிட்டுள்ள அவர், அவர்கள் இலங்கை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள பிரபல நடிகர்கள் எனவும் குறிப்பிடுகிறார்.
கோட்டையில் அமைந்துள்ள ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவொன்றின்போது கருத்துரைக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு கருத்துரைக்கும்போது
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்காக சில கட்சிகளால் நடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அதுபோல தங்கள் கட்சியிலிருந்து எந்தவொரு நடிகையும் தேர்தலில் நிறுத்தப்பட மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment