தேசத்திற்கு மகுடம்' நாட்டின் அபிவிருத்தியின் ஒரு பகுதி- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் சகல அபிவிருத்தித் திட் டங்களும் தரமானதாக அமைவதுடன் உரிய காலத்தில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப் புரை விடுத்தார்.
"2014" தேசத்திற்கு மகுடம்" தேசிய அபிவிருத்திக் கண்காட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாட்டின் பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவே அதன் பிரதிபலன்களை எதிர்கால சந்ததிகள் பயன் பெறக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண் காட்சியுடன் இலங்கையின் சுதந்திர தின வைபவமும் குளியாப்பிட்டியில் நடைபெறவுள்ளதால் வடமேல் பல்கலைக்கழகம், குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலயம், குளியாப்பிட்டி தொழில்நுட்ப வித்தியாலயம் உள்ளடக்கியதாக 162 ஏக்கர் பிரதேசத்தில் இம்முறை "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சி நடத்தப் படவுள்ளது.
இதன் சமகாலத்தில் குருநாகல், கேகாலை, புத்தளம் மாவட்டங்களை இலக்காகக் கொண்டதாக பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
0 comments :
Post a Comment